ெரயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ெரயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2021-11-05 16:52 GMT
ஜோலார்பேட்டை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் வந்தது. போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று மாலை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மற்றும் சென்னையில் இருந்து வந்த தனிப்பிரிவு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது டாடாநகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் ேஜாலார்ேபட்டையில் நின்றது.

 என்ஜினுக்கு அருகில் உள்ள பொதுப் பெட்டியில் ஏறி போலீசார் சோதனை செய்தபோது, இருக்கைக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அந்தப் பேட்டியில் பயணம் செய்த ெரயில் பயணிகளிடம் விசாரித்தபோது, இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்று விட்டதாக, கூறினர். பறிமுதல் ெசய்த கஞ்சாவை வேலூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்