நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம்ரூ.2¼ லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம்ரூ.2¼ லட்சம் மோசடி

Update: 2021-11-03 22:29 GMT
நெல்லை, நவ.4-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அழகு நாச்சியார் புரத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனுராஜ் (வயது 30), கணேசன் (30). 2 பேரும் நண்பர்கள். இவர்களிடம், பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரை சேர்ந்த மணிகண்டன் (29), ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்த அருணாசலம் (36) ஆகிய 2 பேரும், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய அய்யனுராஜும், கணேசனும், அவர்களிடம் ரூ.2¼ லட்சத்தை கொடுத்து உள்ளனர். ஆனால் 2 பேரும், அவர்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. மோசடி செய்யப்பட்டதை அறிந்த அய்யனுராஜ் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அருணாசலம் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்