மான் வேட்டையாடிய வாலிபர் கைது
மான் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் வனச்சரகம் சின்னகாடு பீட் எல்லைக்கு உட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனத்துைறயினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்ேபாது, அங்கு அச்சன்புதூைரச் சேர்ந்த சொர்ணகுமார் (வயது 29), காசிதர்மத்தை சேர்ந்த மனோகரன் (23), சாமிதுரை (29) ஆகியோர் மான், முயல்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்.
வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சொர்ணகுமாரை பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சொர்ணகுமாரை வனத்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து முயல்கள், மான் ஆகியவற்றை கைப்பற்றினர்.