ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2021-11-03 19:10 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை விஜயநகரம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 60). இவர் பந்தல்குடி செல்வதற்காக காந்தி நகரில் இருந்து அகமுடையார் மகால் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பந்தல்குடியில் இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்