பணத்தை திருடிய லேப் டெக்னீசியன் கைது
பணத்தை திருடிய லேப் டெக்னீசியன் கைது
மதுரை
மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அலுவலகத்தில் வைத்து இருந்த பல லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் லேப் டெக்னீசியன் அஜித் குமார் மீது சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 7½ பவுன் தங்கம், வைர நகைகள் மற்றும் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினர்.