இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினி லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினி லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விரலி மஞ்சள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக நேற்று காலை திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் தலைமையிலான போலீசார் காயல்பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மினி லாரியில் மூட்டை மூட்டைகளாக மஞ்சள் இருந்தது. மொத்தம் 69 மூட்டைகளில் சுமார் 2 டன் மஞ்சள் இருந்ததும், இதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
டிரைவர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான காயல்பட்டினம் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஆத்திமுத்து மகன் சித்திரைபாண்டி (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மினி வேனில் இருந்த 2 டன் மஞ்சள் மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.