இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-11-03 14:02 GMT
காரைக்குடி, 
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் அறிவிப்பின்படி அக்டோபர் மாதம் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.  அதன் அடிப்படையில் கல்லூரியில் இந்தநிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவிலூர் ஆதீனம் சீர்வளர் சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். 
பணம் பறிப்பு
கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசகம் தனது சிறப்புரையில், உலக நாடுகளில் இந்தியா சைபர் பாது காப்பில் 10-வது இடத்தில் உள்ளது. சைபர் குற்றங்களில் 60 சதவீதம் மோசடி தொடர்பானதாகவும் 6.6 சதவீதம் பாலியல் துன்புறுத்தல், 4.9 சதவீதம் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான தாகவும் உள்ளது. 
கடந்த ஆண்டில் சைபர் குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரித் துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்