சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-02 19:33 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண பணிக்காக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு 6 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரி சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் சார்பில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செல்வராஜ், நிர்வாகி ஜெயராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்