லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்
சாலையை சீரமைக்கக்கோரி லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெருவில் உள்ள சிமெண்டு குடோனில் இருந்து வந்த லாரியை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அடிக்கடி இந்த சாலை வழியாக சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பழுதான சாலையை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.