தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் பாய்ந்த சிமெண்டு பார லாரி

தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் சிமெண்டு பார லாரி பாய்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-11-02 16:33 GMT
நல்லம்பள்ளி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் (வயது 51) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்டு பார லாரி சாலையோரம் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்