பாளையங்கோட்டையில் வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
பாளையங்கோட்டையில் வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
நெல்லை:
பாளையங்கோட்டை மணப்படைவீடை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 53). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த பொட்டல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (20) என்பவர், வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார்.