நெல்லையில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

நெல்லையில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-02 15:27 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கணேசன். இவர் சம்பவத்தன்று தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது தனது செல்போனை ஆற்றின் கரையில் வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் அந்த செல்போனை திருடிச் சென்றதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம் (வயது 34) என்பவர் கணேசனின் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செய்யது இப்ராகிமை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்