நெல்லை அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

நெல்லை அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-02 14:59 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து காமிலாநகரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவருடைய மகன் வெயில்குமார் (வயது 27). இவர் மீது தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனக்கருதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று வெயில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழங்கினார்.

மேலும் செய்திகள்