திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் ஊக்குவித்தல் கருத்தரங்கு நடந்தது
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் ஊக்குவித்தல் கருத்தரங்கு நடந்தது
திருச்செந்தூர், நவ.3-
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் அமைக்கப்பட்ட “இன்ஸ்டியூசன் இன்னோவேஷன் கவுன்சில்” சார்பாக தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கவுன்சில் அமைப்பாளர் நித்தியானந்த ஜோதி வரவேற்றார். கவுன்சில் தலைவரும் மற்றும் கல்லூரி முதல்வருமான மகேந்திரன் தலைமை தாங்கி, கவுன்சிலின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
கருத்தரங்க கருத்தாளராக குலசேகரன்பட்டினம் “சிவசக்தி இழைகள்” நிறுவன நிர்வாக இயக்குனர் மனோகரன் கலந்துகொண்டு, தன்னுடைய தொழில் வளர்ச்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கவுன்சில் உறுப்பினர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கவுன்சில் தலைவர் ஆலோசனையின் பேரில் கவுன்சில் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.