நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
திருப்பூர
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நாட்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்தும் இருந்து வருகிறது. கோவையில் இருந்து தொடங்கி கரூர் வரை செல்கிற நொய்யல் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நொய்யல் ஆறு மாநகரில் பல இடங்களை கடந்த செல்வதால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் செல்வதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கிறார்கள். இதுபோல் மழைக்காலத்தை பயன்படுத்தி முறைகேடாக சாய-சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் கழிவுநீரை திறந்து விடக்கூடும் என்பதால், இதனையும் கண்காணிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.