15 ஆடுகள் திடீர் சாவு

கந்தர்வகோட்டை அருகே 15 ஆடுகள் திடீர் சாவு

Update: 2021-11-01 19:37 GMT
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள கட்டுவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ராமன் என்பவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள மரவள்ளி கிழங்கு செடிகளை ஆடுகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. மேய்ந்த சிறிது நேரத்தில் 15 ஆடுகள் ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து செத்தன. இதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. 

மேலும் செய்திகள்