கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-01 19:33 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜானகியை(வயது40) போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் ஜானகியின் கணவர் அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். இதேபோல மதுரையை சேர்ந்த செல்வி என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கஞ்சாவை ஆந்திரா மற்றும் மதுரையில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்