திருப்பத்தூர் மாவட்ட 4 தொகுதிகளில் 9,72,606 வாக்காளர்கள் உள்ளனர்
திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 4 தொகுதிகளிலும் 9,72,606 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 4 தொகுதிகளிலும் 9,72,606 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் வெளியிட்டார்.
அதன்படி வாணியம்பாடி தொகுதியில் ஆண்கள்- 1,2,3790, பெண்கள்- 127787, மூன்றாம் பாலினத்தவர்- 41 என மொத்தம் 2,51,618 பேர் உள்ளனர்.
ஆம்பூர் தொகுதியில் ஆண்கள்- 1,16,154, பெண்கள்- 1,23,469. மூன்றாம் பாலினத்தவர்- 27 என மொத்தம் 2,39,650 பேர் உள்ளனர்.
9,72,606 வாக்காளர்கள்
ஜோலார்பேட்டை தொகுதியில் ஆண்கள்- 1,19,626, பெண்கள்- 1,21,677, மூன்றாம் பாலினத்தவர்- 8 என மொத்தம் 2,41,311 வாக்காளர்களும், திருப்பத்தூர் தொகுதியில் 1,19,320 ஆண்கள், 1,20,691 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்- 16 என 2,40,027 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
4 தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள்- 4,78,890, பெண்கள்- 4,93,624, மூன்றாம் பாலினத்தவர்- 92 என மொத்தம் 9,72,606 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியளிடும் நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜசேகர், ஹரிஹரன், செல்வன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.