ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

ராணிப்பேட்டை மாவட்ட வரை வாக்காளர் பட்டியலை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். அதில் ஆண்களை விட, பெண்களே அதிகம் உள்ளனர்.

Update: 2021-11-01 19:06 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வரை வாக்காளர் பட்டியலை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். அதில் ஆண்களை விட, பெண்களே அதிகம் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-

ஆண்களை விட பெண்கள் அதிகம்

வரைவு வாக்காளர் பட்டியலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,10,788 ஆண் வாக்காளர்கள், 1,16,771 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,27,576 வாக்காளர்கள் உள்ளனர். 
சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் 1,36,544 ஆண் வாக்காளர்கள், 1,41,908 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,78,460 வாக்காளர்கள் உள்ளனர். 

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 1,27,648 ஆண் வாக்காளர்கள், 1,36,899 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,64,564 வாக்காளர்கள் உள்ளனர். 
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் 1,27,138 ஆண் வாக்காளர்கள், 1,34,218 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என்ன மொத்தம் 2,61,364 வாக்காளர்கள் உள்ளனர். 

இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 5,02,118 ஆண் வாக்காளர்கள், 5,29,796, பெண் வாக்காளர்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,31,964 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாம்கள்

வருகிற 30-ந் தேதி வரை படிவங்கள் பெறும் பணியை அனைத்து சிறப்பு மையங்களிலும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 13,14,27,28 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி படிவங்கள் பெற்றிட, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

போன் மூலம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையதள முகவரி மூலமாகவும், ஆன்ட்ராய்டு போன் மூலமாக voter helpline Mobile App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற முடியும்.
வருகிற 30-ந் தேதிவரை வரை பெறப்படும் படிவங்கள் மீது
விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்