ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் குளத்தில் மூழ்கி ஆசிரியை சாவு

ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் குளத்தில் மூழ்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-11-01 18:39 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 61). இவர் சோபா-செட் தயாரித்து பர்னிச்சர் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள நாச்சியார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மேலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரத் துணை தலைவராகவும் இருந்து வந்தார். வசந்த், விஜயகுமார், இந்திரஜித் என்ற 3 மகன்கள் உள்ளனர். 

தவறி விழுந்தார்

இந்த நிலையில் இந்திரா நேற்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது  வழியில் உள்ள கோவில் குளத்தில் கை, கால்களை கழுவுவதற்காக  படியில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்த இந்திரா நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணைநடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்