திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்
திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம் நாகல்நகர் வங்கி கிளையில் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கியின் 111 மற்றும் 112-வது பொது பேரவை கூட்டம், நாகல்நகர் வங்கி கிளையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.வீரமார்பன் தலைமை தாங்கி பேசினார். வங்கி மேலாண்மை இயக்குனர் மதி முன்னிலை வகித்தார்.
வங்கி உறுப்பினர்களுக்கு வீட்டு அடமான கடன் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவது, ஏ.டி.எம். மையங்களை ஏற்படுத்தி உறுப்பினர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்குவது, வங்கியின் எல்லையை விரிவாக்கம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் வெள்ளை கோபால், சீனிவாசன், ராமலிங்கம், கிருஷ்ணவேணி, முருகேசன், முருகேஸ்வரி, ஜெயினம்மாள், பொதுப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.