பிரிவுபசார விழாவில் உயிரிழந்த விளாத்திகுளம் ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது

பிரிவுபசார விழாவில் உயிரிழந்த விளாத்திகுளம் ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது

Update: 2021-11-01 15:25 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46). இவர் கடந்த 28 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். ்கடந்த 31-ந்தேதி அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், 29-ந்தேதி பிரிவுபசார விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதையடுத்து ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உடல் அவரது சொந்த ஊரான கீழ விளாத்திகுளம் கொண்டு வரப்பட்டது. அங்கு ரவிக்குமார் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளாத்திகுளம் தாசில்தார் விமலா அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ரவிக்குமார் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அவரது மனைவி ராணியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரவிகுமார் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்