கூடலூர்
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது சுமார் 1½ வயதான பெண் சிறுத்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக சிறுத்தைப்புலி இறந்தது என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை நடத்திய பின்னரே சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.