கூடலூர்
கூடலூரில் உள்ள தட்டக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 32). கூலி தொழிலாளி. இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதால், அதை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.