ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி சாவு

ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி இறந்தார்.

Update: 2021-10-31 22:29 GMT
ஆட்டையாம்பட்டி:
வீரபாண்டி அருகே அரியானூர் அக்ரகார தெருவை சேர்ந்த செல்வகுமார மகள் ஜோதிகா (வயது 18). இவர், தனியார் கல்லூரி ஒன்றியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலையில் வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்றனர். வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவர், ஆட்டையாம்பட்டி பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசாரும், ஆட்டையாம்பட்டி போலீசாரும் விரைந்து சென்று ஜோதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்