களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-10-31 20:27 GMT
களக்காடு:
களக்காடு பகுதியில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் சீறி பாய்ந்து ஓடுகிறது. இதையடுத்து தடுப்பணை பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு கயிறுகள் கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தலையணை வந்த சுற்றுலா பயணிகள் ஆற்றின் ஓரமாக நின்று குளித்தனர். வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு அருந்துவதற்கு வசதியாக பூங்காவில் உணவு அருந்தும் குடில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்