தண்டவாளத்தில் தலை வைத்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

வில்லியனூரில் தண்டவாளத்தில் தலை வைத்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-31 19:54 GMT
வில்லியனூர், நவ.1-
வில்லியனூரில் தண்டவாளத்தில் தலை வைத்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவர்
வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு (வயது 21), ராமு (19), தமிழ்மணி (17) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் தமிழ்மணி, புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்தநிலையில் தமிழ்மணி தினமும் புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
தண்டவாளத்தில் தலை வைத்து...
ஆனால் மைதானத்துக்கு செல்லாமல்  அரும்பார்த்த புரம் ரெயில்வே பாலத்துக்கு கீழ் சென்றார். அப்போது காலை 8.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ரெயில் வந்தது. இதை பார்த்த தமிழ்மணி திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொண்டார்.
கண்இமைக்கும் நேரத்தில் ரெயில் அவர் மீது ஏறியது. இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே தமிழ்மணி பரிதாபமாக       இறந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வில்லியனூர்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக             கதிர் காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்தநாள் 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ்மணியின் தந்தை   இறந்து  விட்டார். கூலி வேலைக்கு சென்று கவிதா 3 மகன்களையும் வளர்த்து   வந்தார்.         தமிழ் மணிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் அன்று தன் உயிரை மாய்த்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்