கோவையில் தீபாவளிக்கு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்

கோவையில் தீபாவளிக்கு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்

Update: 2021-10-31 16:51 GMT
கோவை

தீபாவளி களைகட்டியதால் புத்தாடைகள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். 

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்க கோவை கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். 

குறிப்பாக கோவை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர்.எஸ். புரம் டி.பி.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தீபாவளி விற்பனை 'களை' கட்டி உள்ளது. 

போக்குவரத்து நெரிசல்

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் குவிந்ததால், கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

கூட்டம் அதிகமாக இருந்ததால், திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி ஒலிப்பெருக்கியில் போலீசார் அறிவித்தனர். அத்துடன் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மேலும் செய்திகள்