அவினாசி
அரசு சொத்துக்களை ஆவணங்களில் உள்ளபடி பாதுகாக்க கோரியும், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை அதிகாரி ஆகியோரை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி பாரதிய கிசான் சங்க நிர்வாகி வேலுசாமி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் நேற்று அவினாசி தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து போராட்டத்தை கைவிடுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கலெக்டர் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரனை நடத்த வேண்டும் என்று கூறினர். இதனால் உண்ணாவிரதம் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து அவினாசியிலுள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.