தேனி மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரை பறித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரை கொரோனா பறித்தது.
தேனி:
தேனி பகுதியை சேர்ந்த 42 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 571 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் நேற்று குணமாகினர். 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.