கோத்தகிரி
கோத்தகிரியில் 63 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதன்படி அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்க முதற்கட்டமாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு லாரிகளில் விலையில்லா வேட்டி, சேலைகள் வந்தன.
இவை தொழிலாளர்கள் மூலம் இறக்கப்பட்டு அலுவலக மேல்தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வேட்டி, சேலைகள் வர உள்ளதால், அதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அவை பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார் தெரிவித்தார்.