தண்டையார்பேட்டையில் மின்சார நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்; வருகிற 2-ந்தேதி நடக்கிறது

தண்டையார்பேட்டையில் மின்சார நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

Update: 2021-10-31 04:30 GMT
சென்னை தண்டையார்பேட்டை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை, டி.எச்.சாலை, மணிக்கூண்டு எதிரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்