பசும்பொன் தேவர் வாழ்ந்த இல்லத்தில் குருபூஜை

மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்து, மறைந்த இல்லத்தில் குரு பூஜை நடைபெற்றது.

Update: 2021-10-30 20:23 GMT
திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்து, மறைந்த இல்லத்தில் குரு பூஜை நடைபெற்றது.
வாழ்ந்து மறைந்த இல்லம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பசும்பொன் தெருவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து மறைந்த இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தேவரின் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை சார்பில் அதன் மேலாண்மை இயக்குனரும், தியேட்டர் அதிபருமான கண்ணன் தலைமையில் தேவர் படத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. மேலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை மேலாண்மை இயக்குனர் ஜெயக்கொடி, செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச்செயலாளர் ஓ.எம்.கே.சந்திரன், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கருத்தக் கண்ணன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து கட்சி மரியாதை
தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, பகுதி செயலாளர் உசிலை சிவா, பேரூராட்சி முன்னாள் தலைவர் இந்திரா காந்தி, வட்ட செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தேவரின் படத்திற்கு மாலை அணிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியன், திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் பழனிக்குமார், பொன்மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு தேவரின் படத்திற்கு மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முருகேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கட்சி பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.வி.கதிரவன் கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் தேவராஜன், மாநில செயலாளர் கீழக்குயில்குடி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்