மாமியாருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் கைது
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
அம்பை மறுகால் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மனைவி சின்னத்தாய் (வயது 63). இவர்களுடைய மகள் இசக்கியம்மாள். இவருக்கும், உறவினரான பாளைகோட்டூர்புரத்தை சேர்ந்த பாபா (42) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசக்கியம்மாள் தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாபா தனது மனைவியிடம் பேசுவதற்காக அம்பைக்கு வந்தார். அப்போது, மீண்டும் கணவன்-மனைவிக்கு இடைேய தகராறு ஏற்பட்டது. இதை சின்னத்தாய் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பாபா அரிவாளால் சின்னத்தாயை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அம்ைப அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபாவை கைது செய்தனர்.