உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-30 18:16 GMT
ஆற்காடு

இந்தியாவின் 75-வது சுதநதிர கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக நேரு யுவகேந்திரா (மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடந்தது. 

ஆற்காட்டில் உள்ள இந்திய புராதன சின்னம் டெல்லி கேட் பகுதியில் இருந்து தொடங்கிய ஓட்டத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து, ஓட்டத்தில் கலந்து கொண்டார். 

விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்ட உடற்பயிற்சி கூட இளைஞர்கள் பாலாறு மேம்பாலம் வழியாக ராணிப்பேட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்ததை வந்தடைந்தனர்.

 இந்த ஓட்டத்தில், தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், நேரு யுவகேந்திரா அலுவலக கண்காணிப்பாளர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்