791 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-சூளகிரியில் கலெக்டர் ஆய்வு
791 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 7-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 791 இடங்களில் இந்த முகாம் நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. சூளகிரி ஒன்றியம் கீரனப்பள்ளியில் உள்ள ஒன்றிய தொடங்கப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் கடந்த 23-ந் தேதி வரை 6 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. இந்த 6 முகாம்களில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 902 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.