திருப்போரூர் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்

திருப்போரூர் அருகே வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2021-10-30 05:24 GMT
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், வாயலூர், வெங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பெண் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் வேனில் தொழிற்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த 13 பெண் தொழிலாளர்கள் பணி முடித்து விட்டு பூஞ்சேரி வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் போது, திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் முருகனின் இடது கால் முறிவு ஏற்பட்டது. 4 பெண்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மழை நேரத்தில் டிரைவர் வேனை அதிவேகமாக ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்