மோசடி புகாரில் வழக்குப்பதிவு: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2021-10-29 23:00 GMT
சேலம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். என்ஜினீயரான இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்த பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி உள்பட 2 பேர் ரூ.17 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மணி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மணி வக்கீல் மூலம் முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்