கார் மோதி டீ மாஸ்டர் சாவு

கார் மோதி டீ மாஸ்டர் சாவு

Update: 2021-10-29 21:16 GMT
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 44). கட்டக்குளம் பிரிவு எதிரே உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடன் அதே கடையில் கேஷியராக பணியாற்றும் நீரேத்தானை சேர்ந்த ராமச்சந்திரன்(62) என்பவருடன் வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வந்தார். கட்டக்குளம் பிரிவில் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மலைச்சாமி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராமச்சந்திரன் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து கரூரை சேர்ந்த கார் டிரைவர் சேகர்(44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்