புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-10-29 21:16 GMT
மதுரை 
குப்பை அகற்றப்படுமா? 
மதுரை அண்ணா பஸ் நிலையம் உள்ளே நுழையும் இடத்தில் குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டி நிறைந்து குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புமணி, மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வயதானவர்களும், கர்ப்பிணிகளும் குண்டும், குழியுமான இந்த சாலையில் வாகனத்தில் செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
குமார், சாத்தூர். 
திறக்கப்படுமா? 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா குடிப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பேரையூர். 
சாலை வேண்டும் 
மதுரை கோவில் பாப்பாகுடி திருமலைநகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அதில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு சாலை அமைக்கப்படுமா? 
ெவங்கடேஷ்பிரபு, கோவில்பாப்பாகுடி. 
தடுப்பு சுவர் தேவை 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் பூங்காவனதம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் செல்லும் பாதையில் சாலையோரத்தில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். 
பாலகிருஷ்ணன், கல்குறிச்சி. 
சாலையில் பள்ளம் 
மதுரை மாவட்டம், தபால் தந்தி நகர், கார்த்திக் நகரை சுற்றிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளம் சரிவர மூடவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், குழந்தைகளும் மற்றும் கர்ப்பிணிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாண்டியன், மதுரை. 

மேலும் செய்திகள்