மு.க.ஸ்டாலினுடன் சாலமன் பாப்பையா சந்திப்பு
மு.க.ஸ்டாலினுடன் சாலமன் பாப்பையா சந்திப்பு
மதுரை
பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் அறிஞர்கள் வரதராஜன், திருமலை, அருணகிரி, ராமசாமி, மாரியப்பன் முரளி, பாலசுப்பிரமணியன், கருப்பையா, சந்தானம், ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ராணி ஆகியோர் மதுரையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1-ந்தேதியில் தமிழ்நாடு நாள் என கொண்டாடுவது சரியாக இருக்காது என தெரிவித்தனர். மேலும் பேரரறிஞர் அண்ணா மதராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றிய ஜூலை மாதம் 18-ந்தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட வேண்டும் என ெதரிவித்தும், அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்ைக விடுத்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தார்.