வீடுபுகுந்து நகை திருட்டு

வீடுபுகுந்து நகை திருட்டு

Update: 2021-10-29 20:56 GMT
மதுரை
மதுரை ரெயில்வே காலனியில் குடியிருப்பவர் மாரியப்பன்(வயது 52). ரெயில்வே அலுவலரான இவரது வீட்டில் காளவாசல் சொக்கலிங்க நகர் 1-வது தெருவை சேர்ந்த நாகஜோதி என்பவர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. அதனை வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மாரியப்பன் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் வீட்டில் வேலை பார்க்கும் பெண் நாகஜோதி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்