முதியவரிடம் ரூ.2 லட்சம் திருட்டு
அருப்புக்கோட்டையில் முதியவரிடம் ரூ.2 லட்சம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 80). இந்நிலையில் இவர் நேற்று மாலை பந்தல்குடி சாலையில் உள்ள ஒரு வங்கியில் தனது சொந்த தேவைக்காக ரூ.2 லட்சம் எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் தான் வந்த சைக்கிளை திறப்பதற்காக கையில் பணம் வைத்திருந்த பையை சைக்கிள் முன்னால் உள்ள கூடையில் வைத்தார். இதையடுத்து பூட்டை திறப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் பணம் வைத்திருந்த பையை மர்மநபர்கள் திருடிக்கொண்டு தப்பி ஓடினர். கூடையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் பணத்தை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.