தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்:-
புதர் மண்டிக்கிடக்கும் பாசன வாய்க்கால்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம், எங்கள் (வடக்கலூர்) கிராமத்திற்கு ஏரி பாசனத்திற்கு கடலூர் மாவட்டம், தொழுதூர் அணைக்கட்டு மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. தப்போது இந்த பாசன வாய்க்காலில் புதர் மண்டிக்கிடக்கிறது. அது மட்டுமில்லாமல் இரு கரையோரங்களிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நித்தியாசிவக்குமார், வடக்கலூர், பெரம்பலூர்.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது அவை வடிந்து செல்லு முடியாமல் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீன்சுருட்டி கடைவீதி பகுதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மீன்சுருட்டி, அரியலூர்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து சத்தியநாதபுரம், பூமருதவயல், மகுதுபட்டி வழியாக ராப்பூசல் செல்லும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைபெய்யும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலமன், இலுப்பூர், புதுக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம் , குளத்தூர் தாலுகா, கீரனூர் பழைய சந்தைப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர், புதுக்கோட்டை.
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, முதலைப்பட்டி கிராமம் கவலைநகரில் சாலை வசதி, தெருவிலக்கு, கழிப்பறை வசதிகள் இல்லாமலும் பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும் மழைகாலங்களில் சேரும், சகத்தியுமாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தர்மராஜ், முதலைப்பட்டி, கரூர்.
பருத்தி செடிகளை நாசம் செய்யும் வனவிலங்குகள்
திருச்சி மாவட்டம், பெரகம்பி கிராமத்தில் அதிகளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி செடியில் உள்ள காய்களை மான், குரங்கு போன்றவை திண்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர். இது பற்றி வனத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல முறை மனு கொடுத்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாரத்தை மீட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், பெரகம்பி, திருச்சி.
தொடர்மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பெரமங்கலம் வடக்குத்தெரு இந்திராநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதினால், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின் விசிறி கூட இயங்க முடியாத அளவிற்கு குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இந்திராநகர், திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி நகராட்சி 13-வது வார்டில் உள்ள ஆரோக்கியமாத தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மலைச்சாமி, துவாக்குடி, திருச்சி.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமம் 8-வது வார்டு பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிகால் வசதி இல்லாததால் இச்சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பார்த்திபன், நத்தம், திருச்சி.
வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி தென்னூர் அண்ணா நகர் அக்பர் தெரு ரகமத் பள்ளி வாசல் அருகில் வெறி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதினால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முகமது, தென்னூர், திருச்சி.
டெங்கு பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர், அய்யப்பா நகரில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த மழைநீரில் விஷ ஜந்துக்கள் உலா வருவதினால் இரவு நேரத்தில் இப்பகுதி நடந்து செல்பவர்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள், முத்தரசநல்லூர், திருச்சி.
இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும்
திருச்சி மாவட்டம், முசிறியில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தற்போது திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்சமயம் பெய்து வரும் மழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலின் பிரகாரத்தில் சுற்றுச்சுவர் ஓரிரு இடத்தில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த மண் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே உள்ளதால் கோவிலை பக்தர்கள் சுற்றி வர முடியாத நிலை உள்ளது. மேலும் இடிந்து விழுந்த சுற்றுசுவரையொட்டியுள்ள பகுதியும் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீடுகளில் மழைநீர் புகும் அவலம்
திருச்சி மாவட்டம், உயகொண்டான் திருமலை 53-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உயகொண்டான்திருமலை, திருச்சி.