மாவட்டத்தில் இன்று 618 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் 7-ம் கட்டமாக இன்று (சனிக்கிழமை) 618 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
கரூர்
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 8 லட்சத்து 53 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 6 லட்சத்து 54 ஆயிரத்து 973 பேர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 2 லட்சத்து 44 ஆயிரத்து 361 பேர். எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் வாய்ப்பாக, 7-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
618 இடங்கள்
மொத்தம் 618 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 3 ஆயிரத்து 708 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஒரு செவிலியர், 2 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், ஒரு சுயஉதவிக்குழுவினர், 2 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்ற உள்ளனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.