காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சாதனை
பாலிதீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சித்த மருத்துவர் ஒருவர் காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை
பாலிதீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சித்த மருத்துவர் ஒருவர் காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் தீபமலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நீதிபதி கிருபாநிதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
இதில் சித்த மருத்துவர் ராஜாஹரிகோவிந்தன் (வயது 44) என்பவர் பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அவரது சாதனையை பலர் பாராட்டினர்.
முடிவில் யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.