ரசாயன கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி போலீசில் ஒப்படைப்பு

ரசாயன கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி போலீசில் ஒப்படைப்பு

Update: 2021-10-29 17:57 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே நேற்று டேங்கர் லாரி ஒன்று ரசாயன கழிவுநீர் ஏற்றி வந்து சாலையோரம் நின்றது. அப்போது அங்கு வந்த நவ்லாக் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, அந்த டேங்கர் லாரியில் ஏற்றி வந்த ரசாயன கழிவுநீர் குறித்த போதுமான ஆவணங்கள் இல்லாததால், அந்த டேங்கர் லாரியை சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து வருவாய்த் துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்