1,057 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,057 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Update: 2021-10-29 16:55 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள், 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 1,057 இடங்களில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம், டி.வி., குளிர்பதன பெட்டி, சலவை எந்திரம், செல்போன் உள்பட பல்வேறு பரிசு பொருட்களும், பரிசு கூப்பன்களும் வழங்கப்படுகிறது. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்