ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.