மரத்தில் கார் மோதியது:பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம்

தேவகோட்டையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-10-29 15:56 GMT
தேவகோட்டை,

தேவகோட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 7 பேர் காரைக்குடி அரசு பள்ளியில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர். அந்த காரை டிரைவர் பிரகாசம் ஓட்டிச் சென்றார்.தேவகோட்டை நீதிமன்றம் அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் பிரகாசம் மற்றும் 9-ம் வகுப்பு மாணவி புதியா, மாணவன் அஸ்வின், 12-ம் வகுப்பு மாணவர் பிராங்கிலின் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்